திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சபரி (12). த/பெ. சிவராஜ், குடும்பத்தாருடன் வசித்து வந்த நிலையில் அனுப்பம்பட்டு குளத்தில் தனது நண்பர்களான பார்த்திபன், சந்தோஷ், உமா மகேஸ்வரன், அஜித் ஆகியோருடன் சென்று குளித்துக் கொண்டிருந்ததாகவும். அப்போது சபரி தண்ணீரில் இருந்து வெளியே வராததால் அருகில் இருந்த நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீரில் மூழ்கிய சிறுவனை வெளியே எடுத்த போது இறந்த நிலையில் கிடந்துள்ளார். பின்பு உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு