திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்து அரசுடமையாக்கப்பட்ட 10 இருசக்கர வாகனங்கள் மற்றும் 02 மூன்று சக்கர வாகனங்களை திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடியிருப்பில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு வளாகத்தில் வைத்து (17.04.2025) -ம் தேதி காலை 10.00 மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.
பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் (15.04.2025) மற்றும் (16.04.2025)-ம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சுத்தமல்லி காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடியிருப்பில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டு கொள்ளலாம். மேலும் வாகனங்களை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் (15.04.2025) மற்றும் (16.04.2025)-ம் தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இருசக்கர வாகனத்திற்கு ரூ. 2000/- முன் பணமும் மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு ரூ. 3000/- செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்தவுடன் முழு தொகையை மற்றும் அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி சேர்த்து முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்