திருநெல்வேலி: திருநெல்வேலி, தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்கலம்புதூர், காந்தி நகர், கீழ தெருவை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் ராம் என்ற ராமமூர்த்தி (26). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக தாழையூத்து காவல் ஆய்வாளர், சபாபதி கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மத்திய சிறையில் (18.09.2024) அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்