மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.(18.03.2025) அன்று, மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம், பெருங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட புதுக்குளம் கண்மாய்க்கும், கிளாங்குளம் கண்மாயக்கும் இடையே இடதுபுறம் கிளாங்குளம் கண்மாய் கழுங்கிற்கு செல்லும் மண் ரோட்டில் பெயர் விலாசம் தெரியாத சுமார் (30). வயது முதல் (35). வயது மதிக்கதக்க ஆண் பிரேதம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.
இது சம்பந்தமாக அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலர் திரு சிவகுமார் என்பவர் பெருங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி காவல் நிலைய குற்ற எண் 41/25 U/s 194(3) BNSS . திருமங்கலம் தாலூகா காவல் ஆய்வாளர் திரு. சுப்பையா அவர்கள் தலைமையில் இரண்டு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு. வழக்கைக் கண்டறிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், விசாரணையில் இறந்த சடலமானது சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் காவல் நிலையத்தில் முதல் நிலைக்காவலராக (Grl 2793, 2013 Batch) பணிபுரிந்து வரும் மலையரசன் (36). த/பெ. பிச்சை, அழகாபுரி, A.கொக்குளம், திருச்சுழி அஞ்சல், விருதுநகர் மாவட்டம் என கண்டறியப்பட்டது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக CCTV காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆராய்ந்ததில் மேற்படி குற்ற வழக்கில் ஈடுபட்டது. மதுரை மாநகர், அவனியாபுரம், வல்லனேந்தல்புரம் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் மூவேந்திரன் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு, குற்றவாளி மூவேந்திரன் கைது செய்யப்பட்டு அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது வீட்டிற்கு சென்று வழக்கின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டது. மேலும், சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து கொண்டு இருந்த போது திடீரென அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து சார்பு ஆய்வாளர் திரு. மாரி கண்ணன் அவர்களின் இடது முழங்கையில் குற்றவாளி மூவேந்திரன் வெட்டியுள்ளார்.
திடீர் தாக்குதலில் காயம்பட்ட சார்பு ஆய்வாளர் தங்களது தற்காப்பிற்காக கைத்துப்பாக்கியால் மூவேந்திரனின் வலது முழங்காலில் சுட்டார். தற்போது காயம்பட்ட இருவரும் சிகிச்சைகாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்குற்ற வழக்கில் ஈடுபட்ட சிவா (25). த/பெ திருநாவுக்கரசு, ஹவுசிங்போர்டு காலணி, வில்லாபுரம், அவனியாபுரம், மதுரை என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்