மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் துரிதமாக கண்டறியப்பட்டு வருகிறது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த (09.07.24)-ம் தேதி மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், சிந்துபட்டி காவல் நிலைய சரகத்தில் உள்ள பி.வாகைகுளம் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த சுமார் (70). வயது மதிக்கதக்க காசம்மாள் என்ற மூதாட்டி சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மூதாட்டியின் கணவர் தங்கராஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்துபட்டி காவல் நிலையத்தில் குற்ற எண் 129/2024 ச/பி 103 (1), 331 (4), 305 BNS ன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக குற்றவாளியை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளபட்டு வந்தது. சம்பவயிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரி விரல்ரேகை பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஆகியவை ஆராயப்பட்டது. மேற்படி குற்றச்சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய சரகம், பல்கலை நகர், கல்வி நகரைச் சேர்ந்த சின்னதம்பி மகன் பாக்கியராஜ் (34) மற்றும் இறந்த மூதாட்டியின் மூத்த மருமகள் சுதா க/பெ பரசுராமன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து வழக்கின் சொத்துக்களான 53 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேற்படி குற்றச்சம்பவயிடத்தில் எடுக்கப்பட்ட மாதிரி விரல் ரேகை குற்றவாளி பாக்கியராஜ் என்பவரது விரல் ரேகையோடு ஒத்துப்போனதோடு குற்றவாளிகள் இருவருக்குமிடையே அநேகமான தொலைபேசி அழைப்புகள் இருந்ததற்கான சாட்சியங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
மேற்படி சம்பவமானது குற்றவாளிகள் இருவருக்கும் இடையே இருந்த தகாத உறவைகண்டித்த மூதாட்டி வெளியே கூறிவிடுவார் என்ற காரணத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். என்பதும் வழக்கை திசை திருப்ப வேண்டும் என்கிற நோக்கில் வீட்டிலிருந்த நகைகளை எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வருகிறது. இந்நிலையில் குற்றச்சம்பவம் நடைபெற்ற 10 நாட்களுக்குள் குற்றவாளிகளை கைது செய்து சொத்துக்களை மீட்ட தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்