திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பழவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக பழவூர் பகுதிக்குட்பட்ட 5 இடங்களில் 30 சிசிடிவி கேமராக்களை அமைத்து பழவூர் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா அறையை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., இ.கா.ப., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சிசிடிவி கேமராக்கள் அமைக்க உதவிய ஜான்சன் மற்றும் வசந்த ராஜ் ஆகிய இருவருக்கும் பொன்னாடை அணிவித்தும் நற்சான்றிதழ், கேடயம் வழங்கி பாராட்டிய பின்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், குற்றம் நடவாமல் இருப்பதற்கும் சிசிடிவி கேமரா பெரும் உதவியாக உள்ளது. மேலும் தற்போது மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. சிசிடிவி கேமரா வைப்பதால் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கலாம். மேலும் நடைபெற்ற குற்றங்களை எளிதாக கண்டுபிடிக்கலாம். ஆகவே உங்கள் பகுதிகளில் இன்னும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நீங்கள் முன் வர வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்