தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த வாரம் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால் அணைகள், குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியும், அருவிகளில் நீர் ஆர்ப்பரித்தும் கொட்டி தீர்த்தது. இந்நிலையில் குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் அருவிகளில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்டு (18.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஏ.கே.கமல் கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு வார காலத்திற்கு பிறகு குற்றால அருவியினை சீரமைத்து மீண்டும் குளிப்பதற்கு அனுமதி வழங்கியது பொது மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.