திருநெல்வேலி : திருநெல்வேலி டவுன், குற்றாலம் ரோடு, முகமது முஸ்தபா தெருவை சேர்ந்த துரை என்பவரின் மகன் சிவகுமார் (38). என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் மீது சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மாரீஸ்வரி பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், (11.10.2024) அன்று மேற்படி நபர் குண்டர் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்