மதுரை: வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளியை துணிச்சலுடன் பிடித்த மதுரை பெண் காவல் ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் பாராட்டினார். மதுரை மாவட்டம் கோ.புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெண்ணிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த வழக்கில் குற்றவாளியை துணிச்சலாக துரத்தி பிடித்த கோ.புதூர் குற்றப்பிரிவு பெண் காவல் ஆய்வாளர் நிர்மலா மற்றும் தலைமைக் காவலர் செந்தில் பாண்டியன் ஆகிய இருவரையும் , தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் நேரில் அழைத்து, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி