கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மலைக்கு தனது உறவினருடன் சென்ற பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 போதை இளைஞர்கள். ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று தலைமறைவாக இருந்த மேலும் இருவரை போலீசார் பிடிக்க சென்ற போது துப்பாக்கி சூடு. கிருஷ்ணகிரி பொன்மலைகுட்டை பெருமாள் கோவில் பின்புறம் இரண்டு பேர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர்.
அப்போது குற்றவாளிகள் கத்தியால் தாக்கியதில் இரண்டு காவலர்கள் காயமடைந்தனர். இதனால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சுரேஷ் என்ற குற்றவாளி காலில் காயம் ஏற்பட்டது. மேலும் தப்பி செல்ல முயன்ற மற்றொரு குற்றவாளி நாராயணன் கால் முறிவு ஏற்பட்டு போலீசார் பிடித்தனர். சம்பவ இடத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்