திண்டுக்கல்: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான பழனி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைக்காடு பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்த யானையின் தந்தத்தை எடுத்து வந்து ஒரு கோடிக்கு பேரம் பேசி விற்பனை செய்ய முயன்ற நபர்களை கைது செய்த தமிழ்நாடு வன குற்றப்பிரிவு அதிகாரிகள் வனத்துக்குள் ஆறு மாதத்திற்கு முன்பு யானை இறந்ததாக கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் என்ன செய்தார்கள் யானை இறந்தது தெரியாதா யானை கணக்கெடுப்பு என்பது கண்துடைப்பா இதே போல் எத்தனை யானைகள் இறந்துள்ளது. யானை இறந்துள்ளதா அல்லது கொல்லப்பட்டதா வனத்தையும் வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததால் யானை இறந்ததா வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என வன ஆர்வலர்கள் கேள்வி.