சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த (25.01.2024)-ம் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னப்பன் (65/24) மற்றும் அவரது குடும்பத்தாரர்கள் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக காளையார்கோவில் காவல் நிலைய குற்ற எண்.49/2024 பிரிவு 457, 397 இ.த.ச-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு புலனாய்வில் இருந்து வந்தது. இவ்வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தென்மண்டல காவல் துறை தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் எட்டு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில் தென்னீர்வயலைச் சேர்ந்த பூமிநாதன் மகன் தினேஷ்குமார் (33/24). என்பவர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அக்குற்றவாளியை கைது செய்ததுடன், அவருக்கு குற்றத்தில் உறுதுணையாக இருந்த மற்ற இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டடுள்ளனர்.
விசரணையில் மேற்படி குற்றவாளிகள் மேலும் இது போன்று குற்ற சம்பவங்களில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. அவ்வாறு முடுக்கூரணி கிராமத்தில் இரண்டு பெண்களை கொலை செய்து கொள்ளை அடித்ததும், தேவகோட்டை கண்ணங்கோட்டையில் இரண்டு பெண்களை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சமந்தமாக சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை கைப்பற்ற தென்னீர்வயல் முத்தூரணி அருகே சென்ற போது குற்றவாளி தினேஷ்குமார் காவல் சார்பு ஆய்வாளர்களை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கி காயங்கள் ஏற்ப்படுத்தியதால், காவல்துறையினர் தற்காப்பிற்காக சுட்டதில்குற்றவாளி தினேஷ்குமாருக்கு இடது பக்க முழங்காலுக்கு கீழ் காயம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தில் குற்றவாளி தினேஷ்குமாரிடமிருந்து 33 பவுன் தங்க நகைகள்மற்றும் பணம் ரூ.3,00,000/-, மற்றும் மூன்று இருசக்கர வாகனங்கள் உட்பட பொருட்கள்கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ்வழக்கின் குற்றவாளிகள் மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்டு வழக்கின் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்தது சம்பந்தமாக இரண்டு காவல் துணைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தனிப்படைகளை சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களை தென்மண்டல காவல்துறை தலைவர் Dr.N.கண்ணன், இ.கா.ப., மற்றும் Dr.M.துரை, இ.கா.ப., காவல்துறை துணைத்தலைவர், இராமநாதபுரம் சரகம் மற்றும் திரு.B.K.அர்விந்த், இ.கா.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சிவகங்கை ஆகியோர்கள் நேரில் அழைத்து பாராட்டியதுடன் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்