கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழைய போச்சம்பள்ளியில் குற்றவாளியின் வீட்டின் அருகில் போலீசார் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹ 29,840/- ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்