திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது மஜீத்(26). என்பவரை காவல் நத்தம் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.பிரதீப், இ.கா.ப அவரது அறிவுறுத்தலின்படி நத்தம் காவல் நிலைய ஆய்வாளர்.தங்கமுனியசாமி, நீதிமன்ற இரண்டாம் நிலை காவலர்.கவிதா மற்றும் அரசு வழக்கறிஞர்.ஜோதியின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி முகமது மஜீத் என்பவருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்தாண்டு இதுவரைக்கும் 28 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.