திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வன்னிகோனேந்தல், சிட்டி யூனியன் வங்கி தெருவை சேர்ந்த பாப்பா (55). என்பவரின் வீட்டில் 21 கிராம் தங்க நகைகளை திருட்டுப் போனது தொடர்பாக தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மூவிருந்தாளி, வடக்கு தெருவை விஜயராஜ் (32). என்பவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் (07.10.2024) அன்று குற்றவாளியான விஜயராஜ்க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த தேவர்குளம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்