திருநெல்வேலி : கடந்த 2019 -ம் ஆண்டு மேல ஏர்மாள்புரம், மேற்கு தெருவை சேர்ந்த முருகன் (34). என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்தது குறித்து முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றவாளி முருகன் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் ( பொறுப்பு ) போக்சோ வழக்கின் குற்றவாளியான முருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த முன்னீர்பள்ளம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. சண்முகநாதன்