திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், அம்மைநாயக்கனூர் அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் சத்ரியன் மற்றும் ஆதித்யன் இவர்களை அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட ,S.P.பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள் சத்ரியன் மற்றும் ஆதித்யன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் சத்ரியன் மற்றும் ஆதித்யன் 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா