திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த (28.05.2023 )ஆம் தேதி தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த முருகேஸ்வரன் என்பவரை கொலை செய்த வழக்கில் ஒட்டன்சத்திரம் நகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (எ) சுபாஷ் சந்திர போஸ் (23), என்பவரை ஒட்டன்சத்திரம் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுபாஷின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின், பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் திருமதி.பூங்கொடி இ.ஆ.ப., அவர்கள், சுபாஷ் (எ) சுபாஷ் சந்திர போசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவை தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய போலீசார் சுபாஷ் (எ) சுபாஷ் சந்திர போசை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா