திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை, கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவை சேர்ந்த பாக்கியசாமி மகன் பாலு(33). மற்றும் பெருமாள்புரம், தியாகராஜநகர், நடுத்தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் பாலசுப்பிரமணியன்(26). ஆகிய இருவர் மீது மாநகர காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) காவல் உதவி ஆணையர் N.சுரேஷ். (பாளையங்கோட்டை) காவல் ஆய்வாளர், P.மகேஷ்குமார்,(பாளையங்கோட்டை) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப. ஆணைப்படி (24.09.2025)- அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்