திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் திசையன்விளை, சமாரியா தெருவை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ஜெனோ (30). திசையன்விளை, நெடுவிளை தெருவை சேர்ந்த சலீம் என்பவரின் மகன் அப்துல் (30) ஆகியோருக்கும் இடையே இருந்த முன் விரோதத்தில் (28.08.2015) அன்று பாலமுருகனை அரிவாளால் தாக்க முயற்சித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு ஜெனோ, அப்துல் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை முடிவில் வள்ளியூர் நீதிமன்றம் (29.10.2024)-ம் தேதி குற்றவாளிகளான, ஜெனோ, அப்துல் ஆகிய இருவருக்கும் 4 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திசையன்விளை காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்