சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் மெயின் ரோட்டில் உள்ள மளிகை மற்றும் எலக்ட்ரானிக் கடை உள்ளிட்ட தொடர்ந்து 4 கடைகளை பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து தேவகோட்டை உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்கள் அறிவுறுத்தலின்படி தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் கணேச மூர்த்தி அவர்கள் முன்னிலையில் நகர சார்பு ஆய்வாளர்கள் அன்சாரி உசேன், நமச்சிவாயம், ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் வியாபாரிகள் தங்கள் கடைகளில் உள்ள சிசிடி வி கேமராக்களை பராமரித்து வைக்க வேண்டும் என நகர காவல் ஆய்வாளர் கணேசமூர்த்தி அவர்கள் அறிவுறுத்தினார். தேவகோட்டை ஒரே நாளில் அடுத்தடுத்து கடைகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து தேவகோட்டை நகர காவல் துறையினர் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி