திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் நகர் மற்றும் நகரை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள், அந்நிய சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும், குற்றங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கவும் 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள ரோந்து காவலர்களுடன் கூடுதலாக ஆயுதம் ஏந்திய ரோந்து காவலர்களும் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். பணியமர்த்தப்பட்டுள்ள ஆயுதம் ஏந்திய காவலர்கள் பிரத்தியேகமாக கூடுதல் கவனம் செலுத்தி குற்றச்செய்கைகளை தடுத்தும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் திண்டுக்கல் நகர் மற்றும் நகரை ஒட்டி உள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உதவியாக இருப்பார்கள். பழைய குற்ற சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி சைரன் உடன் ரோந்து பணி மேற்கொள்வர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா