கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மபுரத்தைச் சேர்ந்த அழகேசன் மகள் சினேகா(23). என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சமய் சிங் மீனா, இ.கா.ப., அவர்களிடம் கொடுத்த புகார் மனுவில் V. கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பூண்டி மகன் கோபி (23). என்பவர் இரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 80,000/- பொற்றுகொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றிவிட்டதாக கொடுத்த புகார் மனுவை பெற்று கீழ்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டது. கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி கீழ்குப்பம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆனந்தராசு விசாரணை மேற்கொண்டதில் கோபி என்பவர் சினேகாவை ஏமாற்றியதை போல் V. அலம்பளம் கிராமத்தைச் சேர்ந்த இளவேனி, பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வி, நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் சின்னசேலத்தைச் சேர்ந்த ரியாசுதின் ஆகியோரியிடமும் இரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக பல்வேறு நபர்களிடம் மொத்தம் சுமார் 2,68,000/- ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வேலை வாங்கித் தராமலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமலும் ஏமாற்றியுள்ளது தெரியவருகிறது. மேற்படி மோசடியில் ஈடுபட்ட கோபியை கைது செய்து தொடர் விசாரணைக்கு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.