நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக (09.01.2024) உதவி ஆய்வாளர் G.பாலமுருகன் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை காவல் துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டுவரும் முக்கிய குற்றவாளிகளான 1) சிவமுத்து (39). த/பெ வைத்தி, பட்டமங்கலம், கீழ்வேளூர், 2)ஐயர் என்கிர தனபால் (58) .த/பெ பொன்னுசாமி, சிக்கல், 3) பதினெட்டாம்படியான் (43). த/பெ அழகுதேவர், சுனாமி குடியிருப்பு, செல்லுார், 4) எரவாஞ்சேரி செல்வம் என்கிர செல்வம், எரவாஞ்சேரி, கீழ்வேளூர், 5) சார்லஸ் (27). த/பெ தவமனி, கீழ்வேளூர் ஆகிய முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல் கீழ்வேளூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாராய கடத்தலில் ஈடுபட்ட சாரதி (19). த/பெ ரமேஷ், புலியூர், என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து 1 இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுவார்கள்.