திருநெல்வேலி: திருநெல்வேலி, வீரளபெருஞ்செல்வி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகுட்டி நாராயணன் (53). என்பவருக்கும் அவரது உடன் பிறந்த சகோதரர் பேச்சிமுத்து (62). என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்த நிலையில், (25.03.2020) அன்று முத்துகுட்டி நாராயணன் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவரை வழி மறித்து பேச்சிமுத்து மற்றும் அவரது மகன்களான கந்தசாமி (37). முருகன் (33). மூக்கம்மாள் (34).சிதம்பரம் (57). ஆகியோர் அவரை அரிவாளால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கில் பேச்சிமுத்து, கந்தசாமி, முருகன், மூக்கம்மாள், சிதம்பரம் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், (19.09.2024)-ம் தேதி இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் குற்றவாளிகளான பேச்சிமுத்து, கந்தசாமி, முருகன் மூவருக்கும் தலா 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி மற்ற இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த முன்னீர்பள்ளம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப, வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்