திருநெல்வேலி: திருநெல்வேலி வீரவநல்லூர், கோட்டை வாசல் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சுரேஷிற்கும், (37). அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமாருக்கும்(39). இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. (29.10.2014) அன்று செந்தில்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் சந்திரன்(69). முருகேசன்(45). மதியழகன்(45). நம்பிராஜன் (32).பிச்சுமணி(41). ஸ்ரீகாந்த் (37). விஜய் என்ற மாலையப்பன் (29). ஆகியோர் சுரேஷை அவருடைய வீட்டில் வைத்து அருவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இது குறித்து வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் (20.01.2025) அன்று நீதிமன்றம் குற்றவாளிகளான எட்டு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த வீரவநல்லூர் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்