திருநெல்வேலி: திருநெல்வேலி தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவியாக கிருஷ்ணவேணி(49). என்பவர் 2011ம் ஆண்டு இருந்த பொழுது ஜக்கம்மாள்நகரை சேர்ந்த சுப்பு என்ற சுப்பிரமணியனுக்கும் (60). பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணிக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன் விரோதத்தால் சுப்பு என்ற சுப்பிரமணியன் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (55). சந்தனமாரி (50).சுல்தான் மைதீன் (59). கார்த்திக் (21).ஜேக்கப் (33). பிரவின்ராஜ் (32). விஜயராம மூர்த்தி (34). மற்றும் நடராஜன் ஆகியோருடன் சென்று
கிருஷ்ணவேணியை அருவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தாழையூத்து காவல் துறையினர், கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட பின், இவ்வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் (10.10.2024) நீதிமன்றம் குற்றவாளிகளான சுப்பு என்ற சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், ஜேக்கப், பிரவின்ராஜ், விஜய ராமமூர்த்தி ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 1,30,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த தாழையூத்து காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன்,இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்