திருநெல்வேலி: திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 25 வாகனங்கள் திருநெல்வேலியில் செப். 26ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அத்துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை திருநெல்வேலி அலகில் பறிமுதல் செய்யப்பட்ட 5 இருசக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 18 நான்கு சக்கர வாகனங்கள் என 25 வாகனங்கள் பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலம் திருநெல்வேலி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் செப். 26ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்