கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட 16 இடங்களில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமை வகித்து குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு குறித்து பேசினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்