திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், அந்தோணி ஜெகதா தலைமையில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்ட பேட்டை தூய அந்தோனியார் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு, மற்றும் சிறார்களுக்கு நடக்கும் குற்றங்களை பற்றி எடுத்துக் கூறியும், பெண் குழந்தைகள் எவ்வாறு பாதுகாப்புடன் இருக்க வேண்டியது என்பது பற்றியும் ஒரு விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் சிறு குழந்தைகள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருக்கவும் அவர்களுக்கு நடக்கும் குற்றங்களை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் மாணவ மாணவியர் குற்றங்களால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விளக்கி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்