தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் தயார் செய்து விற்பனை செய்யும் தொழிலாளர்கள் பதிவேடு ஒன்று பராமரித்து வர வேண்டும் எனவும், அதில் ஆயுதம் வாங்குபவர்களின் பெயர் விபரம் பதிவு செய்து பராமரிக்க வேண்டும்.
எனவும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தங்கள் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்து அது குறித்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்,
பேருந்துகளில் பயணிக்கும் சந்தேக நபர்கள் குறித்த தகவல்களை பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும்.
காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர் மூலம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.