திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியைச் சேர்ந்த கந்தையா மகன் வானு என்ற வானுமாமலை (25). நாங்குநேரி காவல் நிலைய எல்கையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் தற்போது பாளையங்கோட்டை சிறையில் உள்ளார். இந்நிலையில், கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு மக்களை அச்சுறுத்தி வருவதாக வானுமாமலையை தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ள நாங்குநேரி காவல் ஆய்வாளர், சுரேஷ் குமார், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப. விற்கு பரிந்துரைத்தார். காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. சுகுமார் உத்தரவின் பேரில், அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















