சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடைக்குளம் கிராமத்தில் கிராவல் மண்குவாரியில் பணம் கேட்டு மிரட்டி ஹிட்டாச்சி இயந்திரத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் குற்றவாளியை தேடி வந்த நிலையில், குற்றச் செயலில் ஈடுபட்ட பாலமுருகன் (எ) கவட்டை பாலா, த.பெ.தேசிகன், ஆனந்தபுரம் பைபாஸ் ரோடு, செல்லமுத்துநகர், மானாமதுரை என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படையினர் (25.02.2024)-ம் தேதி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். சிவகங்கை மாவட்டத்தில் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பா.க.அர்விந்த், இ.கா.ப., அவர்கள் எச்சரித்துள்ளார்.