திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.சிலம்பரசன் அவர்களின் உத்தரவின்படி, மாவட்ட காவல்துறையினர் தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து போதை பொருள் பயன்படுத்துவதின் தீமைகள் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், இணையதள பண மோசடி குறித்து புகார் அளிக்க சைபர் கிரைம் காவல்துறையினரின் 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்வது குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.