மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் நல்லத்துக்குடி கிராமத்தில் (02.07.2024)ம் தேதி விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் குழந்தைகளின் கல்வி அவசியம் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், போதை பொருட்கள் உட்கொள்வதினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இணைய வழி மூலம் மோசடி நபர்களால் செய்யப்படும் குற்றங்கள் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் விளக்கி கூறப்பட்டது.