திருப்புத்தூர் : திருப்புத்தூர் நகர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் திருப்புத்தூர், கண்டவராயன் பட்டி, நாச்சியாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களின் குறைகள் தீர்க்கும் முகாம் திருப்புத்தூர் நகர் காவல் ஆய்வாளர் கலைவாணி, தலைமையில் நடைபெற்றது முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 60க்கும் மேற்பட்ட மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டதாக கூறப்படுகிறது முகாமில் காவல் சார்பு ஆய்வாளர்கள் சேதுராஜ், செல்வ பிரபு, சாமுண்டீஸ்வரி, சிவாஜி ஆகியோர் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு விசாரணை மேற்கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி