தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் (19.11.2025) நடைபெற்ற குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் தூத்துக்குடியை சேர்ந்த ஒரு பெண் ஒருவர் கரூரை சேர்ந்த ஒரு நபருடன் வந்து மனு கொடுத்தபோது, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மேற்படி கரூரைச் சேர்ந்தவர் கரூர் சின்னதாராபுரம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மகன் வின்சென்ட் (49) என்பதும் அவர் கரூர் Anti Corruption Dynamic Party என்னும் அமைப்பை சேர்ந்தவர் என்பதும் அவர் மேற்படி பெண்ணின் குடும்ப பிரச்சனையை குறைதீர்க்கும் மனுகூட்டத்தில் தீர்த்து வைப்பதற்காக மேற்படி பெண்ணிடம் ரூபாய் 5000/- பணம் பெற்றுக் கொண்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் மேற்படி எதிரி வின்சென்ட் மீது ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் மோசடி, திருட்டு உட்பட 3 வழக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் ஒரு வழக்கும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் குறைகளை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் மனு கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரடியாக சந்தித்து மனு அளிக்கலாம் என்றும், இது போன்று தங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இடைத்தரர்களாக செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை தெரிவித்து கொள்கிறது.















