திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வீடுகளில் குறி சொல்வது போல் நடித்து பெண்களிடம் நகையை பறித்துச் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர். திருச்சி தொட்டியம் பகுதியைச் சேர்ந்த மூன்று வாலிபர்களை ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர். தங்கராஜ், சார்பு ஆய்வாளர். இளஞ்செழியன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தேனி, மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கைவரிசை காட்டி உல்லாச வாழ்க்கை வாழ்ந்த வாலிபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா