தாம்பரம் மாநகர காவல், தாம்பரம் காவல் சரக குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக உரிமை கோராத கேட்பாரற்று கிடந்த 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் டி – 2 போக்குவரத்து காவல் நிலையத்தில் 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட 37 இருசக்கர வாகனங்களை இதுவரையில் யாரும் உரிமை கோராத காரணத்தினால் வாகனத்தின் எண்களை வைத்து அதன் உரிமையாளர்களை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினாலும் 48 இருசக்கர வாகனங்களை கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு மாவட்ட அரசிதழ் என் 27 /132 C ல் (1. 6. 2023), ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளது.
உள்ளதை உள்ள நிலையில் (As Is Where Is Condition) டி – 2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலம் Scrab க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் அந்த ஏலத்தில் கலந்து கொள்ள உள்ள ஏலதாரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் GST பதிவு எண் ஆதாரங்களுடன் டி – 2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் (30/ 6/ 2023), -ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணிக்கு முன் வந்து முன்பதிவு கட்டணம் ரூபாய் 500 செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் மேலும் பதிவு செய்த ஏலதாரர்கள் ஏற குழுவினர் முன்னிலையில் 3 7 2023 ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு டி2 குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பகிரங்க ஏலத்தில் கலந்து கொள்ளவும் மேலும் பதிவு செய்த நபர்கள் மட்டுமே கிரங்க ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்திற்கான ஏலத்தொகையை அன்றைய தினமே 100 சதவீதம் செலுத்த வேண்டும் அதற்காக GST கட்டணம் செலுத்திய பின்பு விற்பனை ஆணை வழங்கப்படும்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்