தூத்துக்குடி: குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட ஏரல் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26). என்பவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க குரும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. தங்கராஜ் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. நை.சிலம்பரசன் அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில் மேற்படி குற்றவாளியை (25.01.2026) போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.















