தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காமராஜர் சாலை, கருணாகரன், வீட்டின் முதல் தளத்தில், மயிலாடுதுறை மாவட்டம், திருவாவடுதுறை, சந்திரமோகன்,(49), கார்த்தி,(45) , ஜாகீர் உசேன்,(55), சுரேஷ்,(29), ஆகியோர் ஒரு வாரமாக கட்டுமான, பணியில் ஈடுபட்டனர். நேற்று மதியம், சன்சைடு அமைக்க, சாரம் கட்டினர். திடீரென சாரம் சரிந்து விழுந்து ஜாகீர், உசேன், கார்த்தி, இடிபாடுகளுக்குள் சிக்கினர். தீயணைப்பு துறையினர் கட்டடத்துக்குள் சிக்கிய ஜாகீர், உசேனை, மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். இடிபாடுகளில் சிக்கி இறந்த, நிலையில் ஒரு மணி நேரம் போராடி, கார்த்தி, உடலை மீட்டனர். கும்பகோணம் மேற்கு, காவல்துறையினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்