குமரி: கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி திரு. பத்ரி நாராயணன் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
நான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி, கன்னியாகுமரி மாவட்டத்தின் போலீஸ் எஸ்.பி யாக பொறுப்பேற்றேன். அன்றைய நாளில் இருந்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினேன்.
குமரி மாவட்டத்தில் தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நான் பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 215 பேர் மீது 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 447 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருட்கள் நடமாட்டம் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் குண்டர் சட்டம் பாயும்.இவ்வாறு எஸ்.பி பத்ரிநாராயணன் கூறினார்.