திண்டுக்கல்: திண்டுக்கல், கன்னிவாடி, ஆலந்தூரான்பட்டி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் இருந்த 2 அடி நீளமுள்ள 3 குத்துவிளக்குகள், 1 அடி நீளமுள்ள 1 குத்துவிளக்கு ஆகிய 4 குத்துவிளக்குகளை திண்டுக்கல், முருகபவனம் லட்சுமணபுரத்தை சேர்ந்த நாகராஜ், கொட்டபட்டியை சேர்ந்த ஜெயபிரியா ஆகிய 2 பேர் திருடி இருசக்கரவாகனத்தில் தப்பிச் செல்ல முயற்சித்த போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவர்களை பிடித்து கன்னிவாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து கன்னிவாடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கோட்டை ராஜன் தலைமையிலான போலீசார் 4 குத்துவிளக்குகள் மற்றும் மேற்படி சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா