திருநெல்வேலி : திருநெல்வேலி பாளையங்கோட்டை ஆரோக்கியநாதபுரம் தெற்குத்தெருவைச் சோ்ந்த சூசைமரியான் மகன் மரியகுமாா் (36). இவர் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா், வினோத் சாந்தாராம் (கிழக்கு) பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவரும், மாநகர காவல் ஆணையருமான (கூடுதல் முழுப்பொறுப்பு) முனைவர் பா.மூா்த்தி, இ.கா.ப., பிறப்பித்த உத்தரவுப்படி, மரியகுமாரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (20.02.2025) அன்று அடைத்தனா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்