திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தம் கீழூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சகாயராஜ் (26). கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் இவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நாங்குநேரி மறுகால் குறிச்சியை சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் உதயகுமார் (25).
ஆகிய இருவரையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் N .சிலம்பரசன், இ.கா.ப., பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர், இரா. சுகுமாறன் பிறப்பித்த உத்தரவுபடி, போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்