திருநெல்வேலி : திருநெல்வேலி நகரம் மாதா தென்மேலத் தெருவைச் சேர்ந்த சுடலைமணி மகன் மணிகண்டன்(25). இவர் அடிதடி, பணம் பறிப்பு முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் V.கீதா (மேற்கு) பரிந்துரையின் பேரில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவுப்படி, மணிகண்டன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளையம் கோட்டை மத்திய சிறையில் (02.03.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்