திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை பகுதியில் திருட்டு, வழிப்பறி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி தைக்கா தெருவை சேர்ந்த நாகூர் மீரான் மகன் ஜாபர் சாதிக்(20). திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளம், சிவன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிபாண்டியன் மகன் கந்தசாமி என்ற கார்த்தி(21). ஆகியோர் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் (கிழக்கு) திரு.V.வினோத் சாந்தாராம், காவல் உதவி ஆணையர் (பாளையங்கோட்டை சரகம்) திரு.N.சுரேஷ், காவல் ஆய்வாளர் (பாளையங்கோட்டை குற்றப்பிரிவு) திரு.சு.பொன்ராஜ், ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., அவர்களின் ஆணைப்படி (26.10.2025)-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.
















