திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த மாசானம், மகன் ரமேஷ் என்ற ராமகிருஷ்ணன் (24). இவர் கொலை, கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மேற்படி நபர் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக நாங்குநேரி காவல் ஆய்வாளர், சாகுல் ஹமீது கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், ரமேஷ் என்ற ராமகிருஷ்ணனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் (23.10.2024) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்