திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காருகுறிச்சியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவரின் மகன் உக்கிர பாண்டி (22). என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேற்படி நபர் மீது சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர், தர்மராஜ் குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 – யின் கீழ் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்,இ.கா.ப.,விடம் வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் (29.09.2024) இன்று பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்