திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வடக்கு காருகுறிச்சி, கீழ கிராமத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் உக்கிரபாண்டி என்ற உக்கிரா (23). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் வீரவநல்லூர் காவல் ஆய்வாளர், சுஜித் ஆனந்த் (பொறுப்பு) குண்டர் தடுப்புச் சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (24.06.2025) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்